ரோமியோவை அன்பே சிவம் படம் போல ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. வைரலாகும் பதிவு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரோமியோவை அன்பே சிவம் படம் போல ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. வைரலாகும் பதிவு..!!

Published

on

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாத இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரோமியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, தலைவாசல் விஜய், உள்ளிட்ட ஏராளமான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' கோடை விடுமுறைக்கு வெளியீடு: கவனம் ஈர்க்கும் போஸ்டர் | vijay antony starrer romeo movie poster released - hindutamil.in

ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மற்றொருபுறம் நெகட்டிவ் விமர்சனங்களும் எழுகிறது. சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் எல்லா படங்களையும் விமர்சிப்பது போல ரோமியோ படமும் சரியாக இல்லை என விமர்சித்து பேசி இருந்தார்.

Advertisement

Vijay Antony's 'Raththam' to hit screens on September 28 - The Hindu

அதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, பலர் நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், அவங்க சொல்றது எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Blue Sattai Maran Custody Review: உப்புமா படம்.. கஸ்டடி படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்! | Blue Sattai Maran blasts Venkat Prabhu Custody Movie in his review - Tamil Filmibeat

என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க. ரோமியோ படத்தை அன்பே சிவம் படம் போல ஆக்கிவிட வேண்டாம் என கேட்டுள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அன்பே சிவம் படம் மக்களிடைய அந்த நேரம் வரவேற்பு பெறவில்லை. ஆனால் இப்போது அந்த படம் பெரிதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். விஜய் ஆண்டனியின் சமூக வலைதள பதிவு வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement