LATEST NEWS
நாங்க எல்லாம் அப்பவே அப்படி…! “ஸ்கூலில் செம அட்ராசிட்டி செய்த சிம்பு”…. நடிகர் சக்தி சொன்ன பிளாஷ் பேக்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடித்துக் காட்டியவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதலே கேமரா பார்த்து வளர்ந்த சிம்பு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிப்பவர். தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

#image_title
அதைத்தொடர்ந்து கமலின் தக்கலைப் படத்திலும் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகர் சக்தி சிம்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். பிரபல இயக்குனரான பி. வாசு அவர்களின் மகனான இவர் சிம்புவுடன் சேர்ந்து பள்ளியில் படித்தவர். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

#image_title
இது குறித்த அவர் பேசுகையில் சிம்பு சிறு வயது முதலே சரியான வாலு. ஒரு படத்தில் நடிப்பதற்காக நீண்ட முடியை வளர்த்திருந்தார். அதைப் பார்த்து டீச்சர் முடியை வெட்டுமாறு கூறினார். ஆனால் சிம்பு முடியை வெட்டவில்லை. இதனால் கிளாசை விட்டு வெளியில் அனுப்பி வைத்துவிட்டார்கள். உடனே சிம்பு நீங்க மட்டும் முடியை நீளமாக வளர்த்திருக்கிறீர்கள். நான் வளர்த்த தப்பா என்று அவரயேஎதிர்த்து கேள்வி கேட்டிருக்கின்றார். இதனை சக்தி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.