LATEST NEWS
எங்க தாத்தா யாரு தெரியுமா..? 94 வயதிலும் கடமை தான் முக்கியம்.. நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ வைரல்..!!

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்m அதன் பிறகு ஆண் தேவதை தமிழ் பட்டாசு உள்ளிட்ட படங்களில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் பங்கேற்றார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்ற ரம்யா பாண்டியன் இறுதி சுற்று வரை முன்னேறினார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
நேற்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ரம்யா பாண்டியன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பம்மலில் இருக்கும் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
மேலும் ரம்யா பாண்டியன் தனது 94 வயது தாத்தா Lt col D.P. Chellaiah கடமை தவறாமல் வாக்களிக்க சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வயதிலும் தனது கடமையை சிறப்பாக செய்த அவருக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
View this post on Instagram