LATEST NEWS
முத்தம் கொடுத்தால் தப்பா….! “பாக்குறவங்க கண்ணோட்டத்தில் தான் தப்பு”…. ஓபன்னாக பேசிய இந்திரஜா…!!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகிய பிறகு வெள்ளித்திரையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். தற்போது இவரது மகளின் திருமணம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது.
ரோபோ சங்கர் மகளான இந்திரஜாவுக்கும் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு கமலஹாசன் முதல் விஜய் சேதுபதி வரை ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் மாப்பிள்ளை முத்தம் கொடுத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாக நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை இந்திரஜா பேசியிருக்கிறார். அதில் என் அப்பாவுக்கு நான் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த பலரும் இப்படி எல்லாம் நடந்து கொள்ளலாமா என்று விமர்சித்தார்கள்.
என் அப்பாவும் நானும் பிறந்ததிலிருந்து எப்படி தான் முத்தம் கொடுத்து விளையாடுகிறோம். வளர்ந்து விட்டால் மட்டும் நான் மகள் அல்ல என்று ஆகிவிடுமா? எனக்கு இது தப்பாக தெரியவில்லை. தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தான் அப்படி தெரியும் என்று கூறியிருந்தார்.