எங்கள விட்டு எங்க போனீங்க அப்பா..! ஓட்டு போட நீங்க இல்லையே.. விஜயகாந்தின் நினைவுகளை பகிர்ந்த கேப்டன் குடும்பத்தினர்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

எங்கள விட்டு எங்க போனீங்க அப்பா..! ஓட்டு போட நீங்க இல்லையே.. விஜயகாந்தின் நினைவுகளை பகிர்ந்த கேப்டன் குடும்பத்தினர்..!!

Published

on

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே, சின்ன கவுண்டர், வானத்தைப்போல உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கலை மாமணி விருது கலந்து 2001-ஆம் ஆண்டு விஜயகாந்த்துக்கு கொடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. கேப்டன் விஜயகாந்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் விஜயகாந்த் கட்சியை தொடங்கினார். தேர்தல் நேரங்களில் விஜயகாந்தின் பிரச்சாரத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஒன்று கூடி வருவார்கள். எப்போதும் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வந்து ஓட்டு போடுவார்.

இந்த நிலையில் பிரேமலதாவும் அவரது மகன்களும் கடந்த தேர்தலின் போது விஜயகாந்த் உடன் இருந்ததையும், இப்போது பிரேமலதா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் நீங்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் எங்கள் உயிருடன் கலந்து எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சொக்கத்தங்கம் என பதிவிட்டுள்ளனர்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Premallatha Vijayakant (@_premallathadmdk)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement