எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…. நெப்போலியன் மகன் பகிர்ந்த காணொளி….!! - cinefeeds
Connect with us

CINEMA

எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…. நெப்போலியன் மகன் பகிர்ந்த காணொளி….!!

Published

on

தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் நெப்போலியன் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நெப்போலியன் நடித்துள்ளார்.

நெப்போலியனுக்கு திருமணம் முடிந்த இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது சிகிச்சைக்காகவே நெப்போலியன் இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார்.

Advertisement

அங்கு உள்ள சூழல் நெப்போலியன் அவர்களது மகன் தனுஷுக்கு மிகவும் பிடித்து போய் உள்ளது. அங்கு தன்னை யாரும் வித்தியாசமாக பார்ப்பதில்லை என்றும் தனக்கு அமெரிக்காவில் இருப்பது தான் மகிழ்ச்சி என்றும் மகன் கூறியதால் நெப்போலியன் அமெரிக்காவிலேயே தனது தொழிலை தொடங்கினார்.

அவ்வப்போது படங்களில் நடித்து வந்தாலும் பெரும்பாலான நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவிட்டார். அவரது இரண்டு மகன்களும் திருமண வயதை எட்டிய நிலையில் மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாக நெப்போலியன் அறிவித்திருந்தார்.
அதற்காக திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பிதழும் கொடுத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தனுஷ் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியை பார்த்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C9ITI7jp5YC/?igsh=MTMzbmZjZzlwN2xwZg==

Advertisement