CINEMA
நாளை அழவும், கைத்தட்டவும் தயாராகுங்கள்…. வாழை குறித்து தனுஷ் போட்ட பதிவு…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. இந்த படத்தில் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறுவயது வாழ்க்கை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தானு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் .
மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படம் பார்த்த நடிகர் தனுஷ், சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்க செய்யும் உலகத்திற்கு நுழைய தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.