செம குஷி…! தனுஷ் படத்தில் என்ட்ரி கொடுக்கும் 3000 கோடி பட நாயகி…? ‘D56’ லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!! – cinefeeds
Connect with us

CINEMA

செம குஷி…! தனுஷ் படத்தில் என்ட்ரி கொடுக்கும் 3000 கோடி பட நாயகி…? ‘D56’ லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!

Published

on

நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘D56’ குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜூன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த சாரா, சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் இரண்டு பாகங்களாகச் சேர்த்து ரூ.3000 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் பாலிவுட்டில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்துள்ள சாரா, இப்போது தனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வரவுள்ளார்.

முதலில் இந்தப் படத்தில் நடிக்க ருக்மணி வசந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகியதைத் தொடர்ந்தே சாரா அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. 19 வயதிலேயே பாலிவுட்டில் முத்திரை பதித்த சாரா அர்ஜூன், தனுஷுடன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3000 கோடி வசூல் நாயகியுடன் தனுஷ் கைகோர்ப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in