திரையுலகிற்குத் திரும்புவாரா விஜய்…? தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் சொன்ன சீக்ரெட்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!! – cinefeeds
Connect with us

CINEMA

திரையுலகிற்குத் திரும்புவாரா விஜய்…? தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் சொன்ன சீக்ரெட்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைச் சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸிற்கு விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கப் போவதாகச் செய்திகள் பரவின. இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும் தூத்துக்குடி தொகுதி தவெக வேட்பாளருமான நடிகர் ஸ்ரீநாத், இந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனது சினிமா பயணத்தில் ‘ஜனநாயகன்’ தான் கடைசித் திரைப்படம் என்பதில் விஜய் மிகவும் உறுதியாக இருப்பதாக ஸ்ரீநாத் விளக்கம் அளித்துள்ளார். இத்தகைய இடையூறுகளைத் தாண்டி, இப்படம் வசூல் ரீதியாகப் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் விஜய் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்புவார் என்ற எதிர்பார்ப்புகளுக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், அனிருத்தின் இசையில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

Advertisement

 ஜனநாயகனுக்கு பிறகு விஜய் மேலும் ஒரு படத்தில் நடிப்பார் என்பது வதந்தி என நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தூத்துக்குடி தொகுதி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in