CINEMA
“விஜய் சொன்னது செம மாஸ்…” தவெக தலைவரின் தேர்தல் அறிவிப்புகளைப் பாராட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் பல்வேறு புதுமையான வாக்குறுதிகளை அளித்தார். குறிப்பாக, லஞ்சமற்ற அரசு சேவைகளை உறுதி செய்ய ‘தமிழ்நாடு சூப்பர் ஆப்’, மீனவர்களுக்கு 20,000 ரூபாய் பாதுகாப்பு நிதி மற்றும் மாநிலத்தைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மையமாக மாற்றுவது போன்ற அதிரடித் திட்டங்களை அவர் முன்மொழிந்துள்ளார்.
விஜய்யின் இந்தத் தேர்தல் அறிவிப்புகளைப் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் மனதாரப் பாராட்டியுள்ளார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசுப் பணிகளை எளிதாக்கச் செயலி மற்றும் பொதுமக்கள் யோசனை கூற இணையதளம் போன்ற திட்டங்கள் தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமானவை என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் இந்தத் தொலைநோக்குப் பார்வையை அனைவரும் தேடிப் படிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குச் சின்னத்திரை வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
