கீர்த்தி சுரேஷின் ரெக்கார்டை உடைத்த சஞ்சு சாம்சன்…! 1.9 கோடி ரசிகர்களுடன் நம்பர் 1 இடத்தை பிடித்து மாஸ் சாதனை…!! – cinefeeds
Connect with us

CINEMA

கீர்த்தி சுரேஷின் ரெக்கார்டை உடைத்த சஞ்சு சாம்சன்…! 1.9 கோடி ரசிகர்களுடன் நம்பர் 1 இடத்தை பிடித்து மாஸ் சாதனை…!!

Published

on

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும் தாண்டி, இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை கேரளாவைச் சேர்ந்த பிரபலங்களில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்டவராக நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடத்தில் இருந்தார். தற்போது 1.9 கோடி (19 மில்லியன்) பின்தொடர்பவர்களுடன் சஞ்சு சாம்சன், கீர்த்தி சுரேஷை முந்திச் சென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவர் காட்டிய அதிரடியான ஆட்டமும், டெல்லி அணிக்கு எதிராக அவர் விளாசிய சதமும் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

திரைப்பட நட்சத்திரங்களான துல்கர் சல்மான் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை ஏற்கனவே பின்னுக்குத் தள்ளியிருந்த சஞ்சு, இப்போது கீர்த்தி சுரேஷின் (1.88 கோடி) சாதனையைத் தகர்த்துச் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்ட மலையாளி என்ற கௌரவம் அவருக்குக் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சனின் ‘பிராண்ட் வேல்யூ’ நாளுக்கு நாள் உயர்ந்து வருவதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது. விளையாட்டு மற்றும் சினிமா என இருதுறை ரசிகர்களிடமும் சஞ்சு சாம்சனுக்கு இருக்கும் செல்வாக்கு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in