CINEMA
படம் சிம்பிள் தான்…. ஆனால் வலி இருக்கிறது…. வாழை படம் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்பு…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. இந்த படத்தில் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறுவயது வாழ்க்கை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தானு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் .
மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்து பேசியுள்ளார். மேலும் படம் குறித்து தன்னுடைய பார்வையை வீடியோவிலும் பேசி பதிவு செய்திருக்கிறார். வாழைப்பழம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் சிம்பிளான படம் தான். ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram