CINEMA
G.O.A.T படத்தில் பிரஷாந்த்…. அவரை வேண்டாமென்று மறுத்த விஜய்…. காரணத்தை சொன்ன வெங்கட் பிரபு…!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றி பேசிய வெங்கட் பிரபு, விஜய் சார் கிட்ட பிரசாந்த், பிரபு, மோகன் எல்லாரும் படத்தில் இருக்காங்கன்னு சொன்னதும் என்னய்யா பண்ணுற? வேணாம்யா… இவ்ளோ பேரை வைத்து படம் எடுத்துடுவியானு கேட்டார்.
யோவ் அவரெல்லாம் நாங்க வரும்போது பெரிய ஸ்டார்யா-ன்னு பிரசாந்தை அப்படி புகழ்ந்தார். உங்க கூட நடிக்கிற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அவங்க கேரக்டர்ஸ் நல்லா இல்லாம வருவாங்களா பிரதர் என்று சொல்லி விஜய் சாரை சமாதானப்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.