“திமுக சதி பண்ணலன்னா விஜய் 200 சீட் ஜெயிச்சிருப்பார்” கிளாம்பாக்கத்தில் அவங்க செஞ்ச சதி தான் காரணம்… தேர்தல் நாள் சதியை அம்பலப்படுத்திய தியாகு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுக சதி பண்ணலன்னா விஜய் 200 சீட் ஜெயிச்சிருப்பார்” கிளாம்பாக்கத்தில் அவங்க செஞ்ச சதி தான் காரணம்… தேர்தல் நாள் சதியை அம்பலப்படுத்திய தியாகு..!!

Published

on

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஆளுங்கட்சியான திமுக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் விஜய் 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பார் என்று பிரபல பழம்பெரும் நடிகர் தியாகு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பல வருடங்களாக திமுகவில் பயணித்தவரும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான நடிகர் தியாகு, ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் இந்த அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அவரைப் பல இடங்களிலும் பிரச்சாரம் செய்ய விடாமல் திமுக அரசு தடுத்ததாகவும், பல ஊர்களில் பிரச்சாரத்திற்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கட்டுப்பாடுகளையும் மீறி முதலமைச்சர் விஜய் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதாகத் தியாகு சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திட்டமிட்டு சுமார் 100 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சொந்த ஊர்களுக்குச் சென்று விஜய்க்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருந்த பெரும் திரளான வாக்காளர்களை ஓட்டுப் போட முடியாமல் தடுப்பதற்காகவே இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.

Advertisement

அனைத்துத் தடைகளையும் தாண்டி முதல்முறை வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 35 விழுக்காட்டினர் தவெக-விற்குத் தங்களது பேராதரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒருவேளை கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படாமல் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையைச் சீராக ஆற்றியிருந்தால், விஜய் தம்பி குறைந்தது 200 தொகுதிகளிலாவது இமாலய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைத்திருப்பார் என்று தனது பேட்டியில் நடிகர் தியாகு ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in