LATEST NEWS
யாராவது இதை செஞ்சீங்க அவ்ளோதான்.. வேட்பாளர்களுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. மீறினால் ஆக்ஷன்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தமிழ்நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் , சமீபத்தில் தனக்கு கிடைத்த கள நிலவரம் மற்றும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் தவெகவின் வெற்றியை உறுதி செய்ய தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். இந்த இரு தொகுதிகளும் தவெகவிற்கு மிக முக்கிய அரசியல் பரீட்சையாகக் கருதப்படுவதால், அங்குள்ள தற்போதைய சூழல் குறித்து புதிய ரிப்போர்ட் ஒன்றை அவர் பெற்றுள்ளார்.
இந்த ரிப்போர்ட்டைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகிய இருவருக்கும் அதிரடியான மற்றும் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தொகுதி மக்கள் மத்தியில் நேரிடையாகச் சென்று, பிரசாரத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்களின் குறைகளைக் கேட்டு தவெக அரசின் சாதனை திட்டங்களை முன்னிறுத்தி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் வழங்குவது போன்ற எவ்விதமான முறைகேடான செயல்களிலும் தவெகவினர் யாரும் ஈடுபடக் கூடாது என விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தவெகவின் அரசியல் கொள்கைக்கும், தூய்மையான ஆட்சி நிர்வாகத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சி ரீதியாகக் கடும் நடவடிக்கை பாயும் எனவும், வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் இத்தகைய தவறுகளுக்கு இடம் தரக் கூடாது எனவும் தவெக தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
