LATEST NEWS
பகீர்..! த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல்.. என்கிட்ட எல்லா ஆடியோவும் இருக்கு.. நான் பிரச்சனையை கிளப்புறத்துக்குள்ள நீங்க சரிபண்ணுங்க முதல்வரே… எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை..!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் மீண்டும் வேரூன்றத் தொடங்கியுள்ளதாக அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். தன்னிடம் இது தொடர்பான அனைத்து ஆடியோ கைவசம் இருப்பதாகத் தெரிவித்த அவர், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், ஊழல் விவகாரத்தில் தான் பின்பற்றும் நேர்மையைத் தனது அமைச்சர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அமைச்சர்களின் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்றும், ஓராண்டு கழித்துத் தாம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராட்டத்தில் இறங்குவதற்குள் விஜய் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் களத்தில் ஒருபுறம் த.வெ.க-வும் மறுபுறம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பும் செயல்பட்டு வரும் நிலையில், நமது தலைமுறையிலேயே ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம் என்று அண்ணாமலை உறுதியளித்தார். தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தைக் கொண்டுவருவதே தங்கள் முதன்மையான இலக்கு என்றும், அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடுவோம் என்றும் தனது பேச்சில் தெளிவுபடுத்தினார்.
