LATEST NEWS
ஆமா..! அமித் ஷா என் காதுல சொன்ன ரகசியம் உண்மைதான்… சந்தேகம் இருந்தா அவர்கிட்டயே கேளுங்க… மேடையில் மொத்தமாக போட்டு உடைத்த அண்ணாமலை..!!
சென்னையில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி பொதுக்கூட்டத்தில், பா.ஜ.கவின் ‘பி டீம்’ ன்ற விமர்சனங்களுக்கு முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாகப் பதிலளித்துள்ளார். இந்த மேடைப் பேச்சில், “நான் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதால் என்னை பா.ஜ.கவின் பி டீம் என்று பலரும் விமர்சிக்கிறார்கள்; அமித் ஷா எனது காதில் ஏதோ ரகசியத் திட்டம் சொல்லி அனுப்பியதாகப் பேசுகிறார்கள், அதன் உண்மையை இந்த மேடையில் போட்டு உடைக்கிறேன்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னைத் டெல்லிக்கு அழைத்து, அங்கேயே தங்கி ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு குறைந்தது மூன்று ஆண்டுகள் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டது முற்றிலும் உண்மைதான் என்று அண்ணாமலை ஒப்புக்கொண்டுள்ளார். “யாருக்காவது இதில் சந்தேகம் அல்லது நம்பிக்கை இல்லை என்றால், விரைவில் தமிழகம் வரவுள்ள அமித் ஷாவிடமே நேரடியாகப் போய் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
இருப்பினும், டெல்லியில் தங்கிப் பொறுப்பேற்கும் அந்தத் திட்டம் தனக்கு உடன்பாடானது அல்ல என்பதால், அமித் ஷாவின் அந்த வேண்டுகோளைத் தான் பணிவோடு மறுத்துவிட்டதாக அண்ணாமலை விளக்கியுள்ளார். “எனக்கு டெல்லி அரசியல் செட் ஆகாது; நான் எளிய மனிதனாகத் தமிழ்நாட்டிலேயே தங்கி, எனது தம்பிகள் மற்றும் சகோதரிகளுடன் இணைந்து இங்கேயே மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன்” என்று கூறி, தான் பா.ஜ.கவின் எந்தவொரு ரகசிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
