LATEST NEWS
எம்.ஜி.ஆர் காலம் முதல் விஜய் காலம் வரை… தலைவர்கள் மாறலாம்.. கட்சிகள் மாறலாம்.. ஆனா வெற்றி மாறாது… தவெக-விலும் கெத்து காட்டும் செங்கோட்டையன்..!!!
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முதல்முறையாகத் தமிழக சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.
அதன் பின்னர், கோபிசெட்டிபாளையம் தொகுதியைத் தனது அரசியல் கோட்டையாக மாற்றிய அவர், 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். மேலும், 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் தடையின்றி வெற்றி பெற்று, அதிமுகவின் மிக முக்கியத் தூண்களில் ஒருவராகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்தார்.
கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிப் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த செங்கோட்டையன், தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தற்போது தவெக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் இவரது நீண்ட அரசியல் அனுபவம் ஒட்டுமொத்த அவையையும் வழிநடத்தி வருகிறது.
