CINEMA
TVK கொடியில் பொறிக்கப்பட்டுள்ள தூங்குமூஞ்சி…. அப்போ அது வாகை மலர் இல்லையா…??
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்றைக்கு சென்னை பனையூரில் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வாகை மலர் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த கொடியில் இடம்பெற்றுள்ள மலர் தூங்குமூஞ்சி வாகை என்று அழைக்கப்படும் காட்டு வகையை சேர்ந்தது என்றும் இந்த வாகை தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பச்சை – வெள்ளை நிற பூக்களை கொண்டதே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் வெற்றியை குறிக்கும் வாகை மலர் ஆகும்.