CINEMA
“போகுமிடம் வெகுதூரமில்லை” இந்த படம் பார்க்க நாளை இவர்களுக்கு மட்டும் இலவசம்…!!!
இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் போகும் இடம் வெகுதூரமில்லை. இந்த படத்தில் விமல், கருணாஸ், வேலராமமூர்த்தி ,ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்தார். அதாவது அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவருடைய உடலை ஏற்றுக்கொண்டு சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடு நோக்கி செல்லும் போது ஏற்படும் பிரச்சினை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தின் முதல்நாள் காட்சியை ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை படக்குழுவானது வெளியிட்டுள்ளது.