CINEMA
கல்வியை அந்த கடவுளுக்கும் தடுக்க உரிமையில்லை….. சார் படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி…!!

பாஸ் வெங்கட் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார் . இந்த படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி, கல்வியின் மகத்துவத்தை, கல்வியின் தேவையை ரொம்ப அழகாக சொல்லும் படம். கல்வியை கடவுளுக்கும் தடுக்க உரிமையில்லை என்பதை பாஸ் வெங்கட் அழகாக சொல்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் உங்கள் அனைவரையும் கட்டிப்போடும் என்று கூறியுள்ளார்.