CINEMA
சூர்யா மற்றும் சிவகுமாரை எதிர்க்குற அளவுக்கு எனக்கு திராணி இல்ல- இயக்குனர் போஸ் வெங்கட்…!!

போஸ் வெங்கட் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார் . இந்த படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், சூர்யா மற்றும் அவருடைய அப்பா சிவகுமார் எல்லோரையும் ரொம்ப வருஷமாவே தெரியும். அவங்க கேட்டதுமே நாம மபொசி என்ற டைட்டிலை “சார்” என மாத்திக்கலாம்னு மாத்திக்கிட்டேன். அவங்களை எதிர்த்து அதே டைட்டில் வைக்க எனக்கு திராணி கிடையாது என்று கூறியுள்ளார்.