CINEMA
ராஜதுரை படம் முன்னே பார்த்திருந்தா…. G.O.A.T படம் இன்னும் நல்லா பண்ணியிருப்பேன் – வெங்கட் பிரபு…!!

நடிகர் விஜய் நடித்து’GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் சமீபத்தில் OTTயில் வெளியானது. ஆனால் அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, GOAT வெளியான பிறகுதான் அது ச.சந்திரசேகரின், விஜயகாந்த் நடித்த ராஜதுரையின் காப்பி என்பது எனக்கு தெரியவந்தது. இதை முன்பே தெரிந்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்து இன்னும் நல்ல படத்தை எடுத்திருப்பேன் என்று கிண்டலாக பேசியுள்ளார்.