CINEMA
அஜித் ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள்…. இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்…!!
இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கோட். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, நடிகர் அஜித்தை பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது சமீபத்தில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு பணிகள் அஜார் பை ஜானில் நடந்து முடிந்தது.
அப்போது வெங்கட் பிரபு அஜித் குமாரை சந்தித்துள்ளார். அங்கு நாங்கள் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். விஜய் மற்றும் அஜித்தை ஒரே படத்தில் நடிக்க வைக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். மங்காத்தா 2 திரைப்படத்தில் நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். பல விஷயங்களைப் பற்றி பேசினோம். அது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்று தெரியாது என்று நகைச்சுவையாக பேசி உள்ளார்.