CINEMA
நமீதாவிடம் நாங்க மதம் குறித்து கேட்கவில்லை…. கோவில் நிர்வாகம் விளக்கம்…!!
தமிழ் திரை உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிக்க ஆரம்பித்து விட்ட டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. அதே சமயத்தில் நடிப்பிலிருந்து விலகி அரசியல் பக்கம் சென்றார். இதற்கிடையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடவுள் பக்தி கொண்ட நமிதா கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது நமீதாவை தடுத்து நிறைய நிறுத்திய அதிகாரி ஒருவர் தாங்கள் இந்து தானா? என்று கேள்வி எழுப்பினார் என்றும், தான் இந்து என்பதற்கான சான்றிதழை காண்பிக்குமாறு நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நமீதா வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை ஆணையத்திடம் கோயில் நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கத்தில், “நமீதாவின் மதம் குறித்து யாரும் கேட்கவில்லை” எனக் கூறியுள்ளது.