CINEMA
நீங்கள் இந்துவா…? நமீதாவை அசிங்கப்படுத்திய அதிகாரி…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
தமிழ் திரை உலகில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிக்க ஆரம்பித்து விட்ட டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. அதே சமயத்தில் நடிப்பிலிருந்து விலகி அரசியல் பக்கம் சென்றார். இதற்கிடையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடவுள் பக்தி கொண்ட நமிதா கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது நமீதாவை தடுத்து நிறைய நிறுத்திய அதிகாரி ஒருவர் தாங்கள் இந்து தானா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம் என்று சொன்ன நமிதாவிடம் அதற்கான சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் காட்டுமாறு கடுமையாக கூறியிருக்கிறார். இந்த விஷயம் நமீதாவை மிகவும் பாதித்ததாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram