CINEMA
நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை…. என்னென்ன படிச்சிருக்காங்க தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகைகள் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்தார்கள் என்பது பெரிதும் யாருக்கும் தெரியாது. அந்த வகையில் நயன்தாரா முதல் சாய்பல்லவி வரை என்ன படித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
அடுத்ததாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு மற்றும் வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சமந்தா. இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்து வணிகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
மௌனம் பேசியதே படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி கில்லி, சாமி, ஆறு படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து பிரபலமான த்ரிஷா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றுள்ளார்.
காஜல் அகர்வால் தமிழில் துப்பாக்கி, மாற்றான் போன்ற படங்களில் நடித்து சிகர்களை சம்பாதித்தவர். இவர் மும்பையில் உள்ள கே.சி கல்லூரி இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா படித்துள்ளார்.
நடிகை தமன்னா நடிப்பு ,நடனம் மற்றும் அழகு மூலம் சினிமாவில் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவர் மும்பையில் உள்ள தேசியக் கல்லூரியில் கலை பட்டம் பெற்றுள்ளார்.
சாய்பல்லவி சிறந்த நடிப்பு மற்றும் அழகிய நடந்ததால் பிரபலம் அடைந்தவர். இவர் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துள்ளார்.