CINEMA
காதை பிடித்து கம்மலை காட்டி வீடியோ வெளியிட்ட நயன்தாரா…. குவியும் லைக்குகள்…!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நடிகை நயன்தாரா அப்போது தன்னுடைய மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது சிவப்பு சேலையில் தான் காதுகுத்தியதை வெளிப்படுத்தும் வகையில் போஸ் கொடுத்து விடீயோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram