CINEMA
சினிமா + அரசியல்: வாய்ப்பிருக்கா தளபதி..? சிரித்துக்கொண்டே விஜய் சொன்ன அந்த விஷயம்…!!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவோடு இணைந்து GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். செப்டம்பர் 5 அம்மா தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு, அரசியலில் பயணித்து கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று விஜயிடம் கேட்டபோது, அவர் சிரித்து விட்டு பார்க்கலாம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யை திரையில் பார்ப்பது, தன்னை போன்ற ஒரு சாதாரண ரசிகனின் ஆசை என்றும், இருப்பினும் அவருடைய முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். ‘தளபதி 69’ படத்திற்குப்பின், விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.