CINEMA
வித்தியாசமான ரோலில் நடிக்கும் நடிகை நித்யா மேனன்…. அதுவும் அந்த நடிகருக்கு ஜோடியாக….!!
நடிகை நித்யா மேனன் விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் வித்தியாசமான புதுமையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கதைக்களம் புதுமையாக இருப்பதாகவும், படப்பிடிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். நடிகை நித்யா மேனன் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நித்யா மேனனுக்கு சில திணைகளுக்கு முன்பாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.