CINEMA
விஜயகுமார் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷம்..! வளைகாப்பு கோலத்தில் ஜொலிக்கும் பேத்தி..! குட்டி வாரிசு வரப்போகுது என குடும்பத்தினர் மகிழ்ச்சி…!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவிற்கு, தற்போது வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தியாவிற்கும் டிலான் என்பவருக்கும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திரையுலகமே வியந்து பார்த்த அந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, தற்போது தியா கர்ப்பமாக இருக்கும் நிலையில், குடும்பத்தினர் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வளைகாப்பு விழாவில் நடிகர் விஜயகுமார், அனிதா விஜயகுமார், மற்றும் அவர்களது உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு தியாவை வாழ்த்தினர். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “எங்கள் குடும்பத்தின் அடுத்த வாரிசை வரவேற்கத் தயாராகிவிட்டோம்” என்ற நெகிழ்ச்சியான பதிவோடு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தியா மருத்துவம் பயின்று லண்டனில் செட்டில் ஆகியுள்ளார். அனிதா விஜயகுமாரின் குடும்பம் எப்போதும் ஒற்றுமைக்குப் பெயர் பெற்றது என்பதால், இந்த விழாவிலும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று திரண்டு தியாவிற்கு ஆசி வழங்கினர். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜயகுமார் குடும்பத்திற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, “விஜயகுமார் வீட்டில் அடுத்த குட்டி வாரிசு வரப்போகிறது” என உற்சாகமடைந்துள்ளனர்.
