பயணிகளின் உயிரைக் கையில் பிடிக்க வைத்த திகில் நிமிடங்கள்… பலத்த காற்றால் நிலைதடுமாறி ரன்வேயில் மோதிய விமானத்தின் வால் பகுதி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பயணிகளின் உயிரைக் கையில் பிடிக்க வைத்த திகில் நிமிடங்கள்… பலத்த காற்றால் நிலைதடுமாறி ரன்வேயில் மோதிய விமானத்தின் வால் பகுதி…!!

Published

on

ஆம்ஸ்டர்டாமிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அங்கு தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாகப் பெரும் விபத்து அபாயத்தைச் சந்தித்துள்ளது. பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அந்த விமானம் பக்கவாட்டில் ஆடியவாறு கீழே இறங்கியது.

தரையிறங்கும் முயற்சியின் போது விமானத்தின் முன் பகுதி தூக்கப்பட்டிருந்ததால், அதன் பின்பகுதி (வால் பகுதி) ரன்வேயில் இரண்டு முறை பலமாக உரசிச் சென்றது. நிலைமையை உணர்ந்த விமானிகள் உடனடியாகத் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, விமானத்தை மீண்டும் வான்நோக்கிச் செலுத்தும் ‘கோ-அரவுண்ட்’ அவசர நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அந்த விமானம் இரண்டாவது முறை பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்தத் திகிலூட்டும் தருணம் லைவ் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இதுகுறித்து வான்வழி விபத்து விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in