CINEMA
“உங்க சந்ததியை மாத்துறதுக்கு” விமல் நடிக்கும் சார் படத்தின் டிரெய்லர் வெளியானது…!!
பாஸ் வெங்கட் விமல் நடிப்பில் சார் என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார் . இந்த படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படிச்சிக்கிறோம் என்ற பாடலை பத்மப்ரியா மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்கள். இந்த பாடலுக்கு விவேகா வரிகளை எழுதியுள்ளார். திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.