CINEMA
அடேங்கப்பா…! கடந்த ஆண்டு மட்டும் கீர்த்தி சுரேஷின் மொத்த வருமானம் இவ்வளவா…? லீக்கான தகவல்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். கடைசியாக தமிழில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை சம்பாரிக்கும் அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்ல விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் மூலமும் கீர்த்திக்கு வருமானம் வருவதாக சொல்லப்படுகின்றது. அதன்படி கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் மொத்த வருமானம் ரூ.120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.