CINEMA
கண்ணே பட்டுடும் போலயே….! நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, வெள்ளக்காரதுரை மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது பெரிய படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் மீண்டும் பழையபடி பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஸ்ரீதிவ்யா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் தன்னுடைய புகைப்படங்கள் அடிக்கடி பதிவிட்டு வரும் நிலையில் தற்போது அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram