CINEMA
ஒருத்தரை பிடிக்கலைனா சாக்கடையில தள்ளிடுவா….. பிரியங்கா முகத்திரையை கிழித்த பிக்பாஸ் பிரபலம்…!!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சி. 2019 வருடம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்குக் காரணம் நிகழ்ச்சியில் குக்காக வந்த பெண் தன்னுடைய வேலையை செய்யவிடாமல் தொகுப்பாளர் போன்ற செயல்படுகிறார் என்றும் அவர் தன்னுடைய வேலையை மறந்து என்னுடைய வேலை செய்ய விடாமல் தலையிடுவதாகவும் கூறியிருந்தார். அதாவது மணிமேகலை பிரியங்காவை தான் கூறுகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் நிரூப், பிரியங்கா ஒருத்தரை பிடிக்கலைனா சாக்கடையில தள்ளிடுவா என்று கூறியுள்ளார்.