CINEMA
இனி சினிமாவுக்கு குட்பை…2023-லேயே எல்லாவற்றையும் முடிக்க நினைத்த நிவேதா பெத்துராஜ்…நாக் அஸ்வினுக்கு நன்றி…ஆன்மீகப் பாதைக்கு மாறவிருந்த தமிழ் நடிகை.. தடுத்து நிறுத்திய அந்த ஒரு ‘பிளாக்பஸ்டர்’ படம் எது தெரியுமா?…
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பெரிய கனவோடு திரையுலகில் களம் இறங்குபவர்கள் பலர். அவர்களில் ஒரு சிலருக்குக் கடின உழைப்பைப் போட்டாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகும்போது, ‘இது நமக்குச் செட் ஆகாது’ என்று வேறு துறையைத் தேர்ந்தெடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ், தான் ஒரு கட்டத்தில் நடிப்பை முழுமையாக விட்டு விலக முடிவு செய்த அதிர்ச்சிகரமான தகவலை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
தமிழில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். அண்மைக்காலமாக இவருக்குச் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையாததால் மனமுடைந்த அவர், கடந்த 2023ஆம் ஆண்டோடு சினிமா வாழ்க்கைக்கு முற்றிலும் ‘குட்பை’ சொல்ல முடிவு செய்துள்ளார். சினிமாவை விட்டு விலகி ஆன்மிகப் பாதையில் பயணிப்பதற்காக இமயமலைக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்ததாக அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், விதி அவரை எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள நிவேதா, “சினிமாவை விட்டு விலக நினைத்த என்னை, விதி மீண்டும் கொண்டு வந்து இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் இணைத்துள்ளது. என்னை மறுபடியும் சினிமாவிற்குள் கொண்டு வந்ததற்காக இயக்குநர் நாக் அஸ்வினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் மட்டும் என்னை மீண்டும் அழைக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் இமயமலைக்குச் சென்றிருப்பேன்” என்று கூறியுள்ளார். நிவேதா பெத்துராஜின் இந்தத் திடீர் முடிவு மற்றும் கம்பேக் குறித்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
