CINEMA
ரூ.4500 அபராதம் நிலுவை…. TVK கொடி அறிமுக விழாவிற்கு காரில் வந்த விஜய்…. சர்ச்சையாகும் விவகாரம்…!!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்த நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த அடுத்த மாதம் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெற்ற உள்ளது. பல லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்போடு இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்றைக்கு சென்னை பனையூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வந்த டொயோட்டா இனோவா கிரிஸ்டா காருக்கு 4500 அபராதம் தொகை கட்டப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அபாரத தொகை நிலுவையில் உள்ள நிலையில், அந்த காரில் விஜய் பயணித்துள்ளார். இச்செய்தி வைரலான நிலையில், அபராதத்தை செலுத்த அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.