“தளபதி விஜய்க்குப் போட்டியாகத் தலைவர் தனுஷ்..!” அரசியல் எண்ட்ரி கன்ஃபார்ம்.. தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் மாபெரும் புயல்! – cinefeeds
Connect with us

CINEMA

“தளபதி விஜய்க்குப் போட்டியாகத் தலைவர் தனுஷ்..!” அரசியல் எண்ட்ரி கன்ஃபார்ம்.. தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் மாபெரும் புயல்!

Published

on

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் போட்டியாக நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்குவார் என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில், அவரது அரசியல் என்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டத் தனுஷ் நற்பணி மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில், வழக்கமான ரசிகர் மன்ற பாணியில் இல்லாமல், அரசியல் கட்சிகளைப் போலவே சட்டமன்றத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் பெயர்கள் பிரிக்கப்பட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இந்த போஸ்டரில் தனுஷ் ‘தலைவர்’ என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, தனுஷ் ரசிகர் மன்றத் தலைவரும் இயக்குநருமான சுப்ரமணிய சிவாவே அந்தச் சமூக வலைதளப் பதிவை மறுபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வெறும் ரசிகர் மன்ற மறுசீரமைப்பு மட்டுமல்லாமல், வருங்கால அரசியல் பயணத்திற்கான முதற்கட்ட உள்கட்டமைப்பு வேலைகளே என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது. தளபதி விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் தொகுதி வாரியாகச் நிர்வாகிகளை நியமித்து அரசியல் களம் நோக்கி அடி எடுத்து வைப்பது தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in