LATEST NEWS
திமுக, அதிமுக எல்லாம் இனி வேஸ்ட்… தமிழ்நாட்டை ஆளப்போகும் விஜய் – தனுஷ்? பிரபல ஜோதிடரின் பகீர் அரசியல் கணிப்பு..!!
பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் புதிய கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக தலைவரான முதலமைச்சர் விஜய்க்கு, வரவிருக்கும் எதிர்காலத்தில் மாபெரும் வெற்றிகளும், அதிர்ஷ்டங்களும் தொடர்ந்து கிடைக்கும் என்று அவர் தனது ஜோதிடக் கணிப்பில் மிகத் தீர்க்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் எதிர்காலம் குறித்தும் அவர் ஒரு சுவாரசியமான கணிப்பை முன்வைத்துள்ளார். நடிகர் தனுஷுக்கு எதிர்காலத்தில் மிக வலுவான அரசியல் யோகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனுஷின் அதிகாரப்பூர்வ அரசியல் வருகைக்குப் பிறகுதான் தமிழக அரசியல் களம் மிக விறுவிறுப்பாக மாறும் என்றும், அது ‘விஜய் – தனுஷ்’ என்ற புதிய இருமுனைப் போட்டியைச் சந்திக்கும் என்றும் கணித்துள்ளார்.
தற்போது நடிகர் தனுஷ் தனது அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றத்தை தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாகத் தீவிரமாக விரிவுபடுத்தி, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்தச் சூழ்நிலையில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் இந்த அதிரடி அரசியல் கணிப்பு சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி வைரலாகி வருகிறது.
