LATEST NEWS
“வேட்டி சட்டையில் வந்திருக்கலாம்.. இதுக்குத்தான் பேரவைக்கு அனுப்புனோமா..?” சட்டசபையில் பாஜக MLA அடித்த கூத்து… வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..!!
சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முன்னுரிமை அளித்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் மீது அனைத்துத் தலைவர்களும் தமிழின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பேசி ஆதரவளித்த நிலையில், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான போஜராஜன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகி வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்தின் தொன்மை மற்றும் சட்டப்பூர்வ கட்டாயம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேச வேண்டிய பாஜக MLA போஜராஜன், “தமிழ்த்தாய் வாழ்த்துத் தீர்மானம் கொண்டுவரும் இந்நாளில் முதலமைச்சர் பாரம்பரிய வேட்டி சட்டையில் வந்திருக்கலாம்” எனக் குறிப்பிட்ட கருத்து விவாதப் பொருளாக மாறியது. தமிழின் உணர்வு சார்ந்த இந்த முக்கியமான நாளில், ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியதற்காக பாஜக ஆதரவாளர்களே “இதைப் பேசவா உங்களைப் பேரவைக்கு அனுப்பினோம்?” என அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால், இணையதளங்களில் போஜராஜனின் பேச்சு மீம்களாகவும் ட்ரோல்களாகவும் வேகமாகப் பரவி வருகிறது.
