LATEST NEWS
BREAKING: முதல்வர் விஜய் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. சற்றுமுன் பரபரப்பு..!!
சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சருமான விஜயின் தொகுதி அலுவலகம் முன்பாக, கழிவுநீர் பிரச்சினையைச் சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் வேதாந்தா முருகப்பா தெரு பகுதியில் நீண்ட நாட்களாகக் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கழிவுநீரை உடனடியாக அகற்றி, நிரந்தரத் தீர்வு காண அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
முதலமைச்சரின் தொகுதி அலுவலகத்தை நோக்கிய பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகைப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. நீண்ட நாட்களாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்த்து, போர்க்கால அடிப்படையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
