அமைச்சரே ஐபிஎல் மேட்ச்ல பவுடர் நுணுக்கிட்டு மாத்திரை நுணுக்கினேன்னு கதை விடுறாரு… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண பங்கம்.. சட்டமன்றத்தில் வெடித்த மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமைச்சரே ஐபிஎல் மேட்ச்ல பவுடர் நுணுக்கிட்டு மாத்திரை நுணுக்கினேன்னு கதை விடுறாரு… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண பங்கம்.. சட்டமன்றத்தில் வெடித்த மோதல்..!!

Published

on

கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் அளித்த விளக்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சரே ஐபிஎல் போட்டியில் பவுடர் நுணுக்கி விட்டு மாத்திரை நுணுக்கினேன் என்று கதை விட்டார்” என மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். போதைப்பொருள் விவகாரம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்படுவதை ஏற்க மறுத்த அவர், உண்மைகளை மூடிமறைக்கவே அமைச்சர் சட்டமன்றத்தில் இவ்வாறான கதைகளைக் கூறி நாடகமாடுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு தனது தோல்விகளை மறைக்கப் பார்ப்பதாக விவரித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறையும் அரசும் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையான காரணங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in