போதைப்பொருள் புகார் காரணமல்ல…. இரு குழுக்கள் மோதலே கொலைக்குக் காரணம்… அமுதன் கொலையின் பின்னணி குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

போதைப்பொருள் புகார் காரணமல்ல…. இரு குழுக்கள் மோதலே கொலைக்குக் காரணம்… அமுதன் கொலையின் பின்னணி குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்..!!

Published

on

கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு, மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்றும், இது போதைப்பொருள் தொடர்பான வழக்கு அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

போதைப்பொருள் குறித்துப் புகார் அளித்ததால் தான் இந்த கொலை நடைபெற்றது என்று பரவும் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ அல்லது அரசுக்கோ இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் பேரவையில் தெரிவித்தார்.

Advertisement

பாதிக்கப்பட்ட மாணவர் அமுதனின் கொலை வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அடுத்த 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge sheet) தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் அளித்த இந்த விரிவான விளக்கம் பெரும் விவாதத்தை நிறைவு செய்திருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in