“உங்களுக்கு வெட்கமாக இல்லையா..?” வெளிநாட்டுப் பெண்ணுக்கு நடந்த அநீதி.. கையும் களவுமாகப் பிடித்து கடைக்காரரை வெளுத்து வாங்கிய வலைப்பதிவர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களுக்கு வெட்கமாக இல்லையா..?” வெளிநாட்டுப் பெண்ணுக்கு நடந்த அநீதி.. கையும் களவுமாகப் பிடித்து கடைக்காரரை வெளுத்து வாங்கிய வலைப்பதிவர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஒரு பெண் பயணி, அங்கு பிச்சை கேட்ட மூன்று ஏழைப் பெண்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்தார். அவர்கள் தலா ரூ.50 கேட்ட நிலையில், அந்தப் பெண் அதற்குப் பதிலாக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்று அந்த மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1400 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை வாங்கி வழங்கினார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு உள்ளூர் வலைப்பதிவருக்கு, அத்தனை குறைவான பொருட்களுக்கு ரூ.1400 பில் வந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர் அந்த ரஷ்யப் பெண்ணை அழைத்துக்கொண்டு நேரடியாக அந்த மளிகைக் கடைக்காரரிடம் சென்று பில்லைச் சரிபார்த்தார்.

ये रशियन लड़की 2/3 दिन पहले दिल्ली एयरपोर्ट आई थी, वहां पर दो-चार गरीब महिलाएं बैठी थी, रशियन लड़की से 3 महिलाएं ₹50×3 पैसे मांगने लगी।

रशियन लड़की ने इंसानियत दिखाते हुए एक किराने की दुकान पर गई और उन्हें ₹1400 रुपए का तीनों को राशन खर्चा/पानी दिलवा दिया।

तभी वहां पर एक… pic.twitter.com/GRRE9MbhjH— BHUMI (@Bhumika_2024) August 16, 2026

அப்போது, வாங்கிய பொருட்களின் உண்மையான மதிப்பு ரூ.1100 மட்டுமே என்பது தெரியவந்தது; கடைக்காரர் வெளிநாட்டுப் பெண் என்பதால் அவரை ஏமாற்றி கூடுதல் பணம் வசூலித்தது அம்பலமானது. அதைக் கண்ட அந்த வலைப்பதிவர், “ஒரு வெளிநாட்டு விருந்தினரை இப்படி ஏமாற்றுகிறீர்களா? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கடைக்காரரைக் கண்டித்தார். இந்தச் சூழலில், தனக்காகக் குரல்கொடுத்து உதவிய அந்த வலைப்பதிவருக்கு ஆங்கிலத்தில் நன்றியைத் தெரிவித்த ரஷ்யப் பெண், “உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால்தான் இந்தியா எனக்கு இவ்வளவு அழகாகத் தெரிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in