LATEST NEWS
சட்டப்பேரவையில் எதிரொலித்த அமுதன் கொலை வழக்கு… பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கொடுங்க… அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் அதிரடி கோரிக்கை..!!
நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அமுதன் கொலை விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாக 25 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் உடனடியாக உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பாதிக்கப்பட்ட அமுதனின் குடும்பத்திற்கு விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட இக்கோரிக்கை தற்போதைய கூட்டத்தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
