LATEST NEWS
ஐயோ இது என்ன பக்திக்கு வந்த..! “அதிகாலை 3 மணிக்கு காவல்துறை செய்த கெடுபிடி..” காசி விஸ்வநாதர் கோயிலில் கதறி அழுத்த சிறுமி.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!!
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஜலாபிஷேகம் செய்ய கசிபூர் பகுதியிலிருந்து வந்த சிறுமி ஒருவரிடம் காவல்துறையினர் அதிகாலை 3 மணியளவில் அசல் அடையாள அட்டை கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அடையாள அட்டை இல்லையென்றால் தரிசனம் செய்ய முடியாது என்று தடுத்து நிறுத்தப்பட்டதால், அந்தச் சிறுமி கதறி அழுது சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளார். தெய்வ தரிசனம் பெறச் செல்லும் பக்தர்களை இதுபோன்ற கெடுபிடிகளால் அலைக்கழிப்பது சரியா என்ற கேள்வியையும், பக்தி என்பது அடையாள அட்டைக்கோ அல்லது பணத்திற்கோ அடிபணிந்துவிட்டதா என்ற விவாதத்தையும் இது எழுப்பியுள்ளது.
रात्रि के 3 बजे काशी विश्वनाथ मंदिर में जल चढ़ाने से रोका गया…….लड़की रोती बिलखती रहीं और….आस्था हुई शर्मसार 🤯💔
गाजीपुर से काशी विश्वनाथ मंदिर में जल चढ़ाने पहुंची एक लड़की को रात्री 3 बजे पुलिस ने रोक दिया।
उनसे बनारस की Orignal ID Card मांगा गया। अन्यथा दर्शन ना… pic.twitter.com/GYWSlObfQ2— Pintu Singh (@pintusi11376418) August 17, 2026
காசி என்பது யாருக்கும் சொந்தமான தனிச் சொத்து அல்ல; அது அனைவருக்கும் பொதுவானது என்பதால், பக்தர்களின் மாண்பு எக்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, காசி விஸ்வநாதர் கோயிலில் அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அவமானம் மற்றும் துன்புறுத்தல் குறித்து உத்தரப் பிரதேச அரசும், வாரணாசி காவல்துறையும் உரிய முறையில் நடுநிலையான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
