” என் மனைவி மாடியில் இருந்து விழுந்துவிட்டார்..!” கதறி அழுது நாடகமாடிய கணவன்.. பிணவறையில் அம்பலமான ராணுவ வீரரின் பச்சை பொய்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

” என் மனைவி மாடியில் இருந்து விழுந்துவிட்டார்..!” கதறி அழுது நாடகமாடிய கணவன்.. பிணவறையில் அம்பலமான ராணுவ வீரரின் பச்சை பொய்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் தனது மனைவியைக் கொன்றுவிட்டு அதனை விபத்து போல் சித்தரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அமர்ஜித் சிங், கடந்த ஆகஸ்ட் 13 அன்று விடுமுறையில் வீடு திரும்பியபோது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் தாக்கியதில் காயமடைந்த ரமா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் கொலையிலிருந்து தப்புவதற்காக, ரமா வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடியதுடன், உடனடியாக அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவரது குடும்பத்தினரிடம் ஜவான் பொய் கூறியுள்ளார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ரமாவின் குடும்பத்தினர், அவரது உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து உடனடியாகக் காவல்துறைக்குப் புகாரளித்தனர். திருமணமான நாளிலிருந்து அமர்ஜித் சிங் தங்களது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அடிக்கடி அடித்துத் துண்படுத்தியதாகவும் ரமாவின் தந்தை போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிஎஸ்எஃப் வீரர் அமர்ஜித் சிங் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உட்பட மொத்தம் மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in