CRIME
அடச்சீ வெட்கமா இல்லையா..? 9 வயது மகள் கண்ணெதிரே முத்தமிட்ட காதலன்… நடுரோட்டில் லீலை செய்த இரண்டு குழந்தைகளின் தாய்.. வைரலாகும் வீடியோ…!!
மீரட்டைச் சேர்ந்த ஆஃப்ப்ரீன் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 9 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி சந்தையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அதே பகுதியைச் சேர்ந்த அவரது காதலன் பைக்கில் வந்து, தெருவின் நடுவே அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
வந்த காதலன் சட்டென பைக்கை நிறுத்தி, நடுரோடு என்றும் பாராமல் அந்தப் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார். தன் 9 வயது மகள் அருகிலேயே நின்று கொண்டிருக்கிறாள் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், அந்தப் பெண் எந்த தயக்கமும் இன்றி தன் காதலனுடன் பகிரங்கமாக ரொமான்ஸ் செய்யத் தொடங்கியுள்ளார்.
பொதுமக்கள் நடமாடும் ஒரு சிறிய தெருவை சினிமா செட் போல நினைத்துக் கொண்டு இவர்கள் செய்த இந்த லீலைகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சொந்த மகளின் முன்னிலையிலேயே கொஞ்சமும் நாகரிகமின்றி நடந்துகொண்ட இந்தச் சம்பவம், கொஞ்சமாவது தனிமனித இடைவெளியும் சுயமரியாதையும் வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
