CRIME
ஐயோ பாவம்.. “கணவன் மரணம்… அடுத்த சில மணி நேரங்களில் மனைவியும் மகனும் விபரீத முடிவு..!” சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களைக் கண் கலங்க வைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டைச் சேர்ந்த விஷால் முகர்ஜி (55) என்பவர் தனது மனைவி ஜயா முகர்ஜி (51) மற்றும் மகன் இஷான் முகர்ஜி (27) ஆகியோருடன் காசிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வந்தபோது விஷால் முகர்ஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவியும் மகனும் அவரை பிகே ஹெச் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி விஷால் முகர்ஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
काशी घूमने आए तीन लोग, सबकी अर्थियां उठीं। पति, पत्नी और बेटे का अंतिम संस्कार हुआ…
महाराष्ट्र के रायगढ़ से विशाल मुखर्जी (55 वर्ष), उनकी पत्नी जया मुखर्जी (51 वर्ष) और बेटे ईशान मुखर्जी (27 वर्ष) के साथ काशी घूमने आए थे। विशाल मुखर्जी की तबीयत बिगड़ने के बाद उनकी पत्नी और… pic.twitter.com/hgyIZA0bRl— Chandan Pandey (@Chandanup65) August 15, 2026
கணவரின் இறப்பால் மனமுடைந்த மனைவியும் மகனும், லக்ஸா பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இறுதிச் சடங்குகளைச் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மூன்று பேரின் உடல்களையும் நல்லடக்கம் செய்யும் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
